×

முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: நில நடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டுமின்றி, அதன் அருகில் இருக்கும் பேபி அணை, இடுக்கி அணை மற்றும் வைகை அணைகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்த பாதிப்பும் இருக்காது.

அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான 5 பேர் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறி இருக்கிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல், கேரள மாநில அரசு புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்வதும், திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளதும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய

அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கேரளா மாநில அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Kerala government ,Mullai Periyar Dam ,CHENNAI ,Madhyamik General Secretary ,Mullaip Periyar Dam ,Baby Dam ,Idukki Dam ,Vaigai Dam ,Periyar dam ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...