×

நடிகர் கார்த்திக் குமார் குறித்து கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் கார்த்திக் குமார்-பாடகி சுசித்ரா தம்பதியர் 2018ம் ஆண்டு பிரிந்தனர். சமீபத்தில் பாடகி சுசித்ரா அளித்த நேர்காணலில், முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றி பேசியிருந்தார். இதையடுத்து, பாடகி சுசித்ராவின் பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சுசித்ராவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post நடிகர் கார்த்திக் குமார் குறித்து கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Suchitra ,Kartik Kumar ,Chennai High Court ,Chennai ,
× RELATED பணியிடங்களில் பாலியல் தொல்லையால்,...