×

செய்யும் தொழிலே தெய்வம்: பணியை துவக்குவதற்கு முன் நிறுவனத்தின் வாயிலை தொட்டு வணங்கி பின்னர் பணியை தொடங்கும் மூதாட்டி

திருப்பூர்: செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள் அந்த வகையில் திருப்பூர் பூலுவாம்பட்டி பகுதியில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மூதாட்டி ஒருவர் தூய்மை பணியில் ஈடுபடும் நிலையில் பணியை துவக்குவதற்கு முன் நிறுவனத்தின் வாயிலை தொட்டு வணங்கி பின்னர் பணியில் ஈடுபடும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் பூலுவாம்பட்டி ரிங் ரோடு பகுதியில் தங்கவேல் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக ஜெயக்கொடி என்ற மூதாட்டி பணியாற்றி வருகிறார்.

தினமும் காலையில் நிறுவனத்தின் வாயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் அவர் வழக்கமாக தனது பணியை துவக்குவதற்கு முன்பாக வாயிலில் தொட்டு வணங்கி மரியாதை செய்து பின்னர் வாயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார் .இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை நிறுவன உரிமையாளர் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து தொழில் மீதும் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மீதும் ஒரு பணியாளர் எந்த அளவுக்கு பக்தி உடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த செயல் உணர்த்துவதாகவும், எந்த வேலை என்றாலும் அதில் உண்மையாக செயல்பட வேண்டும் என்பதை ஜெயக்கொடியின் செயல் உதாரணமாக அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

The post செய்யும் தொழிலே தெய்வம்: பணியை துவக்குவதற்கு முன் நிறுவனத்தின் வாயிலை தொட்டு வணங்கி பின்னர் பணியை தொடங்கும் மூதாட்டி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Pooluwambatti ,Dinakaran ,
× RELATED அரசு பஸ்சில் இருந்து முதியவரை தாக்கி...