×

கடலூர் அருகே தோப்புக்கொள்ளையில் உள்ள தண்டவாளத்தில் பழுதாகி நின்ற வாகனம்: ரயில் வருவதை பார்த்ததும் இரு சக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடிய இளைஞர்கள்

கடலூர்: கடலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் பழுதாகி நின்ற இரு சக்கர வாகனம் அந்த வழியே வந்த ரயிலுக்கு அடியில் சிக்கியது. ரயில் ஓட்டுனரின் சாதூரியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைகளிலிருந்து- பெங்களூர் சென்று கொண்டிருந்த ரயில் கடலூர் அருகே தோப்புக்கொள்ளை என்ற பகுதியில் ஆல் இல்லா லெவல் கிராஸிங்கில் தண்டவாளத்தில் கிடந்த இரண்டு சக்கர வாகனம் மீது வேகமாக மோதிய நிலையில் இரு சக்கரவாகனம் ரயில் எஞ்சினுக்கு கீழே சிக்கியது.

ரயில் வேகமாக சென்ற நிலையில் சாதுரியமாக அந்த ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார். மேலும் இருசக்கர வாகனம் ரயிலில் சிக்கியதால் அதனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து ரயிலிலிருந்து காவலர்கள் விசாரித்த போது அதே கிராமத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது ஆல் இல்லா லெவல் கிராஸிங்கில் அவர்கள் தாண்ட முற்ப்பட்டபோது திடீரென இரு சக்கர வாகனம் பழுதாகியது. அதனை உடனடியாக அப்புறப்படுத்த முடியாத நிலையில் ரயில் அருகில் வருவதை கவனித்த அவர்கள் இரு சக்கர வாகனத்தை தண்டவாளத்தில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

எனவே தண்டவாளத்தில் இருந்து வாகனத்தை எடுக்கும் முயற்சியாக கிராமமக்கள் ஒன்றிணைந்து ரயில் எஞ்சினுக்கு கிழே உள்ள இரு சக்கரவாகனத்தில் கயிற்றினை கட்டி அதனை இழுத்து பிடித்து கொண்டனர். பின்னர் இன்ஜின் ஓட்டுநர் ரயிலை பின்னோக்கி எடுத்தபோது இரு சக்கர வாகனம் வெளியே வந்தது. அதனை தொடர்ந்து இரு சக்கர வாகனம் தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தபட்ட நிலையில் அரை மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இரு சக்கரவாகனத்தின் மீது ரயில் வேகமாக மோதிய நிலையில் சாதுரியமாக அந்த ரயிலை ஓட்டுநர் நிறுத்திய காரணத்தினால் பெறும் விபத்து தவிர்க்கப்பட்டிருந்தாலும் இரு சக்கர வாகனத்தை தண்டவாளத்தில் போட்டு சென்ற நபர்கள் யார் என்பது குறித்து தற்போது ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post கடலூர் அருகே தோப்புக்கொள்ளையில் உள்ள தண்டவாளத்தில் பழுதாகி நின்ற வாகனம்: ரயில் வருவதை பார்த்ததும் இரு சக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடிய இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Thoppagai ,Cuddalore ,Bangalore ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட்