×

“மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்” : உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல்!!

சென்னை : புதிய குடும்ப அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. ரேஷன் கார்டு என்று அழைக்கப்படும் குடும்ப அட்டை தமிழகத்தில் மிக முக்கியமானது. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அரசுகள் பல்வேறு சலுகைகள் அறிவிக்கின்றன. குறிப்பாக ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் தான் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். கலைஞர் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் மாதம் மாதம் கிடைக்கும். அதேபோல் வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு தொகை என அரசு அறிவிக்கும் நிதியுதவி திட்டங்கள் எல்லாமே ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தான் தரப்படுகிறது.

இதனால் ரேஷன் கார்டு வாங்க, புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் ஏற்கனவே கூட்டுக்குடும்பமாக வசிப்பவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் சிறப்பான மாநிலங்களில் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான அரிசி பருப்பு முதல், உதவி தொகை வரை அனைத்தையும் பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றன.இவற்றிற்கு உணவு பொருட்கள் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. இதனிடையே கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியானது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், “பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். புதிய குடும்ப அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகவே மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய குடும்ப அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றபின் புதிதாக 2 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தனர்.

The post “மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்” : உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Food Supply Department ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் புதிதாக 2 லட்சம் ரேஷன்...