×

முதன்முறையாக இன்சுலர் மூளைக் கட்டிக்கு டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் கீஹோல் முறையில் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை: உலகில் முதன்முறையாக இன்சுலர் மூளைக் கட்டிக்கு டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் கீஹோல் முறையில் அறுவை சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. சென்னையை சேர்ந்த 44 வயது பெண்ணுக்கு மூளையில் இன்சுலா எனப்படும் சிக்கலான பகுதியில் கட்டி இருந்தது. இந்த கட்டியை, டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் கீஹோல் அணுகுமுறையில் அப்போலோ மருத்துவமனை புற்றுநோய் மையம் வெற்றிகரமாக அகற்றி உள்ளது.

இதுகுறித்து நரம்பியல் துறை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஹிருஷிகேஷ் சர்க்கார், பிரதீப் பாலாஜி, விக்னேஷ், அக்னிஷியா வினோத் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையை சேர்ந்த 44 வயதுடைய ஒரு பெண்ணின் மூளையில் டாமினன்ட்-பக்க இன்சுலர் மடலின் மெல்லிய மடிப்புகளுக்குள் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. செரிப்ரல் கார்டெக்ஸுக்குள் ஆழமான இடத்தில் அமைந்து இருக்கும் இன்சுலாவில் அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினம்.

அந்த பகுதிகளில் ரத்த நாளங்களின் அடர்த்தியான வலைப் பிணைய அமைப்பால் அடுக்குகளாக அமைந்துள்ளது. பாரம்பரிய அறுவை சிகிச்சை அணுகுமுறைகளில், பாராலிசிஸ், ஸ்ட்ரோக், மொழிக் குறைபாடு போன்ற ஆபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் வலிப்புத் தாக்கங்கள் மற்றும் மூளை வீக்கங்கள் போன்ற சிக்கல்கள் ஏற்படும் அபாயத்தையும் இது அதிகரிக்கும்.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை புற்றுநோய் மைய மருத்துவர்கள், புருவத்தில் சிறிய கீறல் மூலம் இன்சுலாவை எட்டும் இந்த புதிய கீஹோல் அணுகுமுறையை பயன்படுத்தி அந்தக் கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர். காப்பீடு மூலமும் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post முதன்முறையாக இன்சுலர் மூளைக் கட்டிக்கு டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் கீஹோல் முறையில் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : Apollo Hospitals ,Chennai ,Apollo Hospital ,
× RELATED இந்தியாவில் முதன்முறையாக குடல்...