×

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம்

சென்னை : காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம் சூட்டியுள்ளார். நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2 நாட்களுக்கு முன் டெல்லியில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். உணவு அருந்திக் கொண்டே கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதிலளித்தார். ராகுல் காந்தியின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவிய நிலையில் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானபின் அதிமுகவின் பல மாற்றங்கள் நிகழும் என கூறப்படும் நிலையில் செல்லூர் ராஜு பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Minister ,Sellur Raju ,Congress ,Rahul Gandhi ,Chennai ,Former ,
× RELATED அதிமுகவிலிருந்து விலகி காங்கிரசில்...