×

காரைக்குடியில் பரபரப்பு: கத்தி முனையில் 12 சவரன் தங்கம், 7 கிலோ வெள்ளி கொள்ளை; போலீசார் விசாரணை

சிவகங்கை: காரைக்குடி 5 விளக்கு பகுதியில் நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி 120 சவரன் தங்கம், 7 கிலோ வெள்ளிகளை 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் பறித்து சென்றனர். சென்னையில் இருந்து நகை செய்வதற்காக தங்கத்தை வாங்கி வந்தபோது இந்த துணிகர செயல் அரங்கேறியுள்ளது.

சிவங்ககை மாவட்டம் காரைக்குடி 5 விளக்கு பகுதியில் சுந்தரம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் அந்த பகுதியில் தங்கநகை, வெள்ளி பொருட்களை செய்யும் வேலை செய்துவருகிறார். இவர் வழக்கமாக நகை செய்வதற்கு சென்னை சென்று தங்கம், வெள்ளி வாங்கி வருவது வழக்கம். இந்த சூழலில் நேற்று சென்னையில் இருந்து சென்ற அவர் அதிகாலை அவரது வீட்டின் அருகே சென்றார். இவர் சென்னையில் இருந்து 7 கிலோ வெள்ளியும், 120 சவரன் தங்கமும் வாங்கி வந்துள்ளார்.

இதில் நகை வியாபாரியின் வீட்டிற்கு மிக அருகில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரது கையில் இருந்த பையை பறித்து சென்றனர். இது தொடர்பாக காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காரைக்குடியில் பரபரப்பு: கத்தி முனையில் 12 சவரன் தங்கம், 7 கிலோ வெள்ளி கொள்ளை; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Sivagangai ,Chennai ,Dinakaran ,
× RELATED அணைவதற்கு முன் விளக்கு...