×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 900 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று ஒரே நாளில் 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

கோடை வெயில் காரணமாக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இந்த நிலையில், அஞ்செட்டி, கேரெட்டி, ஒகேனக்கல் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்காளக கோடை காலம் மற்றும் மழை இன்மையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 200 கனஅடியாக நீடித்து வந்தன. மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளிலும் கடந்த இரு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மற்றும் அஞ்செட்டி, கேரட்டி, நாட்ரபாளையம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 3500 கன அடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது.

நேற்று காலை நிலவரப்படி 900 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று ஒரே நாளில் 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Okanagan Cauvery river ,Dharmapuri ,Dharmapuri District ,Pennagaram ,Okenakal ,Okenakal Cauvery river ,Dinakaran ,
× RELATED வரத்து அதிகரிப்பால் குண்டுமல்லி விலை சரிவு