×

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் ஒரு பகுதி மின்விளக்குகள் மட்டும் எரிவதால் வாகன ஓட்டிகள் அவதி

*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சிதம்பரம் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புறவழிச்சாலையில், விழுப்புரம்-நாகை இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று, முடிவடைந்த பகுதிகளில் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. இதில் சாலைகளில் மரக்கன்றுகள், மின்விளக்குகள் அமைக்கப்பட்டு சாலை பணி நிறைவடைந்துள்ளது. மேலும் இதில் போக்குவரத்து துவங்கப்பட்டு சிதம்பரத்திலிருந்து கொள்ளிடம், சீர்காழி, மாயவரம், நாகை பகுதிகளுக்கு இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்கள், கார், வேன், பேருந்து, கனகர வாகனங்கள் உள்ளிட்டவை அதிகளவில் சென்று வருகின்றன.

இந்நிலையில் லால்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து செல்லும் சாலையில் ஒருபுறம் மட்டும் மின்விளக்குகள் எரிந்த நிலையில் உள்ளது. மறுபுறம் சாலையில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த புறவழிச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமாக இரவு நேரத்தில் ஒருபுறம் சாலை ஓரத்தில் மின்விளக்குகள் எரிந்த நிலையிலும், மறுபுறத்தில் எரியாமலும் உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் எதிர் திசையில் வரும் வாகனங்கள் எது என்று தெரியாமல், சாலை விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே இச்சாலைகளில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி, இவற்றை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் ஒரு பகுதி மின்விளக்குகள் மட்டும் எரிவதால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Lalpuram ,Cuddalore district ,Villuppuram-Nagai ,Dinakaran ,
× RELATED திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில்...