×

ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் வேட்புமனுதாக்கல்

ஹமீர்பூர்: இமாச்சலில் 4 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததால் காங்கிரசை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் காலியாக உள்ள 6 சட்டபேரவை தொகுதிகளுக்கும் 1ம் தேதி இடைதேர்தல் நடக்கிறது. ஹமிர்பூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று வேட்புமனுதாக்கல் செய்தார். அவருடன் பாஜ மூத்த தலைவர்கள் சென்றிருந்தனர். மேலும், சிம்லா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினோத் சுல்தான்புரி நேற்று வேட்புமனுதாக்கல் செய்தார். அவருடன் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் சென்றிருந்தனர்.

The post ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் வேட்புமனுதாக்கல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Anurag Thakur ,Hamirpur ,Lok Sabha ,Himachal ,Congress ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED கைது நடவடிக்கை சட்டவிரோதம் நியூஸ்...