×

மருத்துவமனையில் விசாகா சிங் அட்மிட்

நடிகை விசாகா சிங் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் விசாகா சிங். இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் மும்பையில் குடும்பத்தினரின் பிசினஸை கவனித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார். இவருக்கு ஏராளமான பாலோயர்கள் உள்ளனர்.

இந்நிலையில் திடீரென மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படத்தை விசாகா சிங் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் அந்த புகைப்படத்துக்கு கீழே குறிப்பிட்டுள்ளார். ஆனால் என்ன பிரச்னை என்பதை அவர் ெவளிப்படுத்தவில்லை. இதையடுத்து விரைவில் குணமடைந்து நலம் பெற ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Visakha Singh ,Raja ,Mumbai… ,
× RELATED சென்னையில் 4 வெள்ளைக்கிளிகள் பறிமுதல்..!!