×

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்ய முடிவு..!!

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடியில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

பிராட்வே பேருந்து நிலைய இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிராட்வேயில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. பிராட்வே பேருந்துநிலையத்தை தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்ய முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Broadway ,Chennai ,Ailuthidal ,
× RELATED சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை...