×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018 மே 22ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக விசாரணைக்கு எடுத்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இதை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட அதிகாரிகளையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

எதிர்மனுதார்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும், ஜூன் 7ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post தூத்துக்குடி துப்பாக்கி சூடு அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,National Human Rights Commission ,Tuticorin ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள்...