×

4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு…

சென்னை: மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேற்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு, இந்த ஆண்டில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக பள்ளியின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டு, முன் கூட்டியே கடந்த 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால், 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் தேதி மற்றும் 12ம் தேதி நடப்பதாக இருந்த தேர்வுகள் 22, 23ம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

இதையடுத்து, 1 முதல் 3ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 5ம் தேதியுடன் ஆண்டுத் தேர்வுகள் முடிந்ததால் 6ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 4 முதல் 9ம் வகுப்புகளுக்கு ரம்ஜான் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் நேற்று முன்தினம் வரை நடந்தன. இதையடுத்து, நேற்று முதல் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இருப்பினும் கோடை வெயில் அதிகரித்தால் பள்ளிகள் திறப்பது தள்ளிப் போகும் வாய்ப்புள்ளது.

The post 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு… appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamilnadu ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...