×

நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதலில் அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, திருநெல்வேலி தொகுதி பா.ஜ. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாயும், திருநெல்வேலி மாவட்ட திமுக செயலாளரின் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பண பறிமுதல் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திருநெல்வேலி தொகுதி சுயேச்சை வேட்பாளர் ராகவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருதமுடியாது என்று பதில்மனு தாக்கல் செய்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, ராகவனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதலில் அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Nayanar Nagendran ,Chennai ,Lok Sabha elections ,Tamil Nadu ,Tirunelveli Constituency ,BJP ,Tirunelveli ,DMK ,
× RELATED தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல்...