×

பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவுக்கு பெல்ஜியன் ஷெப்பர் வகை 3 நாய் குட்டிகள் புது வரவு: போலீஸ் கமிஷனர் பெயர் சூட்டினார்

சென்னை: மோப்ப நாய் பிரிவுக்கு வாங்கப்பட்ட பெல்ஜியன் ஷெப்பர் வகையை சேர்ந்த 3 நாய் குட்டிகளுக்கு போலீஸ் கமிஷனர் பெயர் சூட்டினார். சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள மோப்ப நாய் பிரிவில் தற்போது 21 மோப்ப நாய்கள் உயர்ரக பயிற்சிகள் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கீழ்ப்பாக்கம் மற்றும் புனித தோமையர்மலை ஆகிய 2 இடங்களில் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் இந்த பிரிவு இயங்கி வருகிறது. அதில் 14 நாய்கள் வெடி குண்டுகளை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றவை, சாத்தியமான அச்சுறுத்தல்களை விரைவாகவும், துல்லியமாகவும் அடையானம் காண்பதை உறுதி செய்கின்றன.

கூடுதலாக 6 நாய்கள் குற்றங்களை கண்டறியவும், 1 நாய் போதை பொருட்கள் கண்டறிதலுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவுக்கு பெல்ஜியன் ஷெப்பர் வகையை சேர்ந்த 3 நாய் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களேயான இந்த நாய் குட்டிகளுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தனது அலுவலகத்தில் ‘கார்லோஸ், சார்லஸ், லாண்டோ’ என பெயர் சூட்டினார். இந்த 3 நாய் குட்டிகளுக்கும் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படும் என மோப்ப நாய் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 5 நாய்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு மாதவரம் நாய்கள் பராமரிப்பு இடத்தில், உரிய மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

The post பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவுக்கு பெல்ஜியன் ஷெப்பர் வகை 3 நாய் குட்டிகள் புது வரவு: போலீஸ் கமிஷனர் பெயர் சூட்டினார் appeared first on Dinakaran.

Tags : Metropolitan Police ,CHENNAI ,Chennai Metropolitan Police Department ,
× RELATED மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக...