×

வெகுஜன விரோதியாக உலக மக்களால் பார்க்கப்படுகிறார் பிரதமர் மோடி: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: சொந்த மக்களையே பிளவுபடுத்தி இனப்படுகொலைக்கு நேராக வழிநடத்தும் பிரதமர் மோடி வெகுஜன விரோதியாக உலக மக்களால் பார்க்கப்படுகிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “விஸ்வகுரு என்று தன்னை அடையாளப்படுத்த முயற்சிக்கும் பிரதமர் மோடி சொந்த மக்களையே பிளவுபடுத்தி இனப்படுகொலைக்கு நேராக வழிநடத்தும் வெகுஜன விரோதியாக உலக மக்களால் பார்க்கப்படுகிறார்.

தனது 10 ஆண்டுகால ஆட்சியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலைக்கு பலி கொடுத்த மோடி ஏழைகளின் உணவுக்கு தான் Guarantee என கூறுகிறார்.

மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்த்து ஏழைகளின் மின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியவர், சமையல் எரிவாயு, பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தி ஏழைகளின் மடியில் கை வைத்தவர், பெண்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் கேள்விக்குறியாக்கியவர் இன்று ஓட்டுக்காக பெண்களை லட்சாதிபதி ஆக்குவேன் என பேசுகிறார்.

ஊர் மட்டுமல்ல,உலகமே சிரிக்கிறது. விஸ்வகுரு என்று தன்னை அடையாளப்படுத்த முயற்சிக்கும் மோடி சொந்த மக்களையே பிளவுபடுத்தி இனப்படுகொலைக்கு நேராக வழிநடத்தும் வெகுஜன விரோதியாக உலக மக்களால் பார்க்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.

The post வெகுஜன விரோதியாக உலக மக்களால் பார்க்கப்படுகிறார் பிரதமர் மோடி: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Minister ,Mano Thangaraj ,Chennai ,Modi ,Viswaguru ,Mano Tangaraj ,
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க...