×

சண்டை போடுபவர்களுக்கு தகுதியில்லை பஹரம்பூர் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் பரிந்துரை

கொல்கத்தா: மேற்குவங்கத்தின் பஹரம்பூர் தொகுதியில் மே 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு ராம நவமி கொண்டாட்டத்தின்போது இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், “8 மணி நேரம் ஒரு விழாவை மக்கள் அமைதியாக கொண்டாட முடியாமல் சண்டை போடும் மக்கள் மக்களவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தகுதி அற்றவர்கள்.

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள போது இரு பிரிவினர் சண்டையிட்டால், அந்த மக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யாரும் தேவையில்லை. அங்கு தேர்தல் நடத்துவதால் என்ன பயன்?” என்று காட்டமாக தெரிவித்தார். இதைதொடர்ந்து பஹரம்பூர் தேர்தலை ஒத்தி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.

The post சண்டை போடுபவர்களுக்கு தகுதியில்லை பஹரம்பூர் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Baharampur ,Election Commission ,Kolkata ,West Bengal ,Ram Navami ,Chief Justice ,D.S.Sivagnanam ,
× RELATED ஒன்றியத்தில் பலவீனமான அரசை விரும்புகிறார் மம்தா: நட்டா குற்றச்சாட்டு