×

உடல்நலம் சீரானது ராகுல் மீண்டும் இன்று பிரசாரம்

புதுடெல்லி: உடல் நலம் சீரானதை தொடர்ந்து ராகுல்காந்தி இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கேரள மாநிலத்தில் அவர் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து 3 நாட்கள் ஓய்வு எடுத்த அவர் இன்று மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டர் பதிவில்,’ ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குகிறார். அமராவதி மக்களவை தொகுதியில் இன்று மதியம் 12:30 மணிக்கும், சோலாப்பூரில் பிற்பகல் 3:30 மணிக்கும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

The post உடல்நலம் சீரானது ராகுல் மீண்டும் இன்று பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,NEW DELHI ,RAKULGANDHI ,Congress ,Rakulganti ,Lok Sabha elections ,Kerala ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான...