×

மதுரை வலையங்குளத்தில் மெகா சமபந்தி விருந்து

அவனியாபுரம், ஏப். 23: மதுரை அருகே வலையங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது  தானாக முளைத்த தானலிங்க பெருமாள் சுவாமி கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு விடிய, விடிய மாபெரும் அன்னதானம் வழங்குவது வழக்கம். இப்பகுதி மக்கள் இந்நிகழ்வை 400 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை, தலைமுறையாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு விழாவையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பின் 2,250 கிலோ அரிசி, 1000 கிலோ துவரம் பருப்பு மற்றும் கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், கேரட், அவரைக்காய் என 5 டன் அளவில் காய்கறிகள் கொண்டும், 300க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை கொண்டும் சமையல் செய்யப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு பூஜையுடன் மெகா சமபந்தி விருந்து துவங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மதுரை வலையங்குளத்தில் மெகா சமபந்தி விருந்து appeared first on Dinakaran.

Tags : Mega Sambandi Party ,Madurai Network ,Avaniyapuram ,Thanalinga Perumal Swami Temple ,Valayangulam ,Madurai ,Chitra Purnami ,Alaghar river.… ,Mega Samabandhi ,Velayangulam ,
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...