×

ஒடிசாவில் அரச குடும்பத்தை சேர்ந்த 12 பேர் போட்டி

புவனேஷ்வர்: ஒடிசாவில் பல்வேறு அரச குடும்பங்களை சேர்ந்த 12 பேர் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிகின்றனர். ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவை தொகுதி மற்றும் 147 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 13ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் பல்வேறு அரச குடும்பங்களை சேர்ந்த 12 பேர் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். ஆளும் பிஜூ ஜனதா தளம் அரச குடும்பங்களை சேர்ந்த 8 பேரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பாஜ சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும் அரச குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர்கள். இவர்களில் 10 பேர் சட்டமன்ற தேர்தலிலும் இரண்டு பேர் மக்களவை தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.

The post ஒடிசாவில் அரச குடும்பத்தை சேர்ந்த 12 பேர் போட்டி appeared first on Dinakaran.

Tags : Odisha ,Bhubaneshwar ,
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து