×

மணத்தக்காளிக் கீரை மண்டி

தேவையானவை

மணத்தக்காளி; கீரை – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 6
கெட்டி தேங்காய்ப்பால் – அரை கப்
அரிசி கழுவிய தண்ணீர்
(மண்டி) – தலா அரை கப்
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
வெந்தயம் – அரை தேக்கரண்டி.

செய்முறை:

கீரையை சுத்தம் செய்து நறுக்கவும். குக்கரில் எண்ணெயை காய வைத்து தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, காய்ந்த மிளகாயை அப்படியே போட்டு வெங்காயம் (நறுக்கியது) பூண்டு சேர்த்து வதக்கவும். அது வதங்கியதும் இரண்டாம் தேங்காய்ப்பால், அரிசி மண்டியை சேர்த்து உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிடவும். இதில் கீரையைப் போட்டு, மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கி, முதல் பாலை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

The post மணத்தக்காளிக் கீரை மண்டி appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்