×

மணிப்பூரில் வன்முறை அரங்கேறிய 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது..!!

இம்பால்: மணிப்பூரில் வன்முறை அரங்கேறிய 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது. மணிப்பூரில் இரு சமூக மக்களுக்கு இடையே நீடிக்கும் வன்முறைகளால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் அங்கு அமைதியை நிலைநாட்டாமலேயே மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 2 தொகுதிகளில் அவுட்டர் மணிப்பூர் தொகுதியின் சிலத்து பகுதிகளுக்கும், இன்னர் மணிப்பூருக்கு முழுமையாகவும் வெள்ளிக்கிழமை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது இன்னர் மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

அதை பாதுகாப்பு படையினர் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்னர் மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த குறிப்பிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையம் 11 வாக்குசாவடிகளை சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கிடையே மக்கள் ஆர்வமுடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

The post மணிப்பூரில் வன்முறை அரங்கேறிய 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது