×

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆண்களைவிட அதிகமாக வாக்களித்த பெண்கள்

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். ஆண்களை விட அதிகமாக 8,60,353 பெண்கள் மக்களவை தேர்தலில் வாக்களித்துள்ளனர். 39 தொகுதிகளையும் சேர்த்து 2.12 கோடி ஆண்கள் வாக்களித்துள்ள நிலையில் 2.21 கோடி பெண்கள் வாக்களித்துள்ளனர்.

2019 தேர்தலைவிட இந்த தேர்தலில் வாக்களித்த ஆண்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் பெண்கள் 2.18 கோடி பேர் வாக்களித்த நிலையில் தற்போது 2.21 கோடி பெண்கள் வாக்களித்துள்ளனர். கடந்த முறை 2.13 கோடி ஆண்கள் வாக்களித்த நிலையில் தற்போதைய தேர்தலில் 2.12 கோடிகள் ஆண்கள் வாக்களித்துள்ளனர்.

கடந்த தேர்தலை விட தற்போது கூடுதலாக பெண்கல் வாக்களித்துள்ளதற்கு தமிழ்நாடு அரசின் திட்டங்களே காரணம் என அரசியல் பார்வையார்கள் கூறுகின்றனர். இலவச பேருந்து பயணம், உரிமை தொகை திட்டங்களால் மகளிர் வாக்கு அதிகரித்திருக்கலாம் என அரசியல் பார்வையார்கள் கூறினர்.

The post மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆண்களைவிட அதிகமாக வாக்களித்த பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Tamil Nadu ,
× RELATED 6ம் கட்ட மக்களவை தேர்தலில் 866...