×

நெல் அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை

 

போச்சம்பள்ளி, ஏப்.21: போச்சம்பள்ளியில் நெல் அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையால், இயந்திரங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளில் அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில், நெல் அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சில விவசாயிகள் வெளிமாவட்ட தொழிலாளர்களை அழைத்து வந்து, நெல் அறுவடை செய்து வருகிறார்கள். சிலர் ஆட்கள் கிடைக்காத காரணத்தால், தங்கள் வீட்டில் உள்ளவர்களை வைத்து அறுவடையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், சில விவசாயிகள் இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்து வருகிறார்கள். இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போ,து தானியங்கள் மற்றும் வைக்கோல் சேதம் அடையும் நிலையை பொருட்படுத்தாமல், விவசாயிகள் எப்படியாவது நெல்லை அறுவடை செய்ய வேண்டும் என முடிவு செய்து இயந்திரங்களை கொண்டு அறுவடையில் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரே சமயத்தில் நெல் அறுவடைக்கு வருவதால் காவேரிப்பட்டணம், மலையாண்டஅள்ளி, புதூர், கண்ணன் கொட்டாய், கொட்டாவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இயந்திரங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் வாடகை அதிகரித்தாலும், பொருட்படுத்தாமல் விவசாயிகள் நெற்பயிரை அறுவடை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிக வாடகை கொடுத்தும் இயந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

The post நெல் அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Krishnagiri district ,
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...