×

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் பரப்புரை

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் பரப்புரை மேற்கொள்கிறார். கர்நாடகத்தில் ஏப் 26 மற்றும் மே 7ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி 3 முறை கர்நாடகம் வந்து பிரச்சார பொதுக்கூட்டம், வாகன பேரணியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி 4-வது முறையாக அவர் மீண்டும் இன்று கர்நாடகா வருகிறார்.

சிறப்பு விமானம் மூலம் கர்நாடகம் வரும் அவர், சிக்பள்ளாப்பூரில் நடைபெறும் பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதை முடித்துக் கொண்டு அவர் மாலை 6 மணியளவில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதில் பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் வருகையால் ட்ரோன்கள் பறக்க தடை; ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் பரப்புரை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Karnataka ,Bangalore ,Modi ,Dinakaran ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...