×

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் சகோபுரத்தில் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா

 

சீர்காழி,ஏப்.20: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டைநாத சுவாமி கோயிலில் திருமுலைப்பால் உற்சவம் கடந்த 15ம் தேதி வெகு விமர்சியாக தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் 5ம் நாள் விழாவில் சகோபுர விழா நடைபெற்றது. விழாவையொட்டி விநாயகர் சுவாமி அம்பாள் முருகன் திருஞானசம்பந்தர் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு முக்குலத்தோர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சகோபுரத்தில் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் தர் வாண்டையார் சகோ புரத்தை தொடங்கி வைத்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கோயில் கட்டளை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் கோயில் நிர்வாகி செந்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் சகோபுரத்தில் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா appeared first on Dinakaran.

Tags : Pancha ,Chakopuram ,Sirkazhi Chattainath Swamy temple ,Sirkazhi ,Tirumulaipal Utsavam ,Chattainatha Swamy temple ,Mayiladuthurai district ,Dharmapura ,Masilamani ,Desika ,Gnanasambandha ,Paramacharya ,Swami ,Murthys ,Sakopuram ,
× RELATED கோவையில் மழை வேண்டி யானை வைத்து கஜபூஜை