×

கோம்பை பகுதியில் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

தேவாரம், ஏப்.20: கோம்பை பகுதிகளில் வாகன ஓட்டுனர்களிடம் போக்குவரத்து விதிகள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம், கோம்பை பகுதியில் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது. நகரின் குறுகிய சாலைகளில் கனரக, இலகு ரக, டூவீலர், வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. ஆனால் டூவீலர் ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கின்றனர்.

கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது பலத்த காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. மேலும் கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் வாகனங்களை இயக்குவதால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி, அவர்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோம்பை பகுதியில் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Gombai ,Dewaram ,Theni district ,Dinakaran ,
× RELATED வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க கோரிக்கை