×

வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது

 

ஈரோடு,ஏப்.20: ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவினையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு கடந்த 17ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி ஜவகர் உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில், மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டிருந்தனர்.

இதில், ஈரோடு சூரம்பட்டி வஉசி 1வது வீதியில் குப்புசாமி என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஈரோடு தெற்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி (63) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், பவானிசாகர் பூங்கார் காலனி பகுதியில் மது விற்பனை செய்து வந்த அதேபகுதி கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த சுப்பிரமணி (74) என்பவரை கைது செய்து, 20 மதுபாட்டில்களை பவானிசாகர் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆசனூர் சோதனை சாவடியில் கர்நாடகா மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த முருகன் (54) என்பவரை ஆசனூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Tasmac ,Erode district ,Dinakaran ,
× RELATED வெள்ள பாதிப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிப்பு