×

நாடாளுமன்ற தேர்தல் என்பது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல்: வாக்களித்த பின் கனிமொழி கருத்து

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான கனிமொழி, அவரது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை 8.45 மணியவில் வாக்களிப்பதற்காக வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையில் நின்றனர். அப்போது கனிமொழியுடன் வாக்காளர்கள் பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வாக்களித்தபின் கனிமொழி அளித்த பேட்டி: இது நாட்டை, ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். அந்தத் தெளிவுடன், உணர்வுடன் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து அவர் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

The post நாடாளுமன்ற தேர்தல் என்பது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல்: வாக்களித்த பின் கனிமொழி கருத்து appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,CHENNAI ,DMK ,Deputy General Secretary ,Tuticorin Parliamentary Constituency ,Rajathi Ammal ,St. Eppas School ,Mylapore, Chennai ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...