×

வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் 62 பேர் வாக்களிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்திருந்தனர். அதேபோல் இறையூர் கிராமத்தை சேர்ந்த இரு வேறு சமூகத்தை சேர்ந்த மக்களும் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் வேங்கைவயல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வேங்கைவயல் பகுதியில் ஒட்டு மொத்தமாக உள்ள 59 வாக்காளர்களும் வாக்களிக்க வாக்குச்சாவடி க்கு செல்லாமல் வாயில் கருப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் இறையூர் கிராமத்தில் 482வாக்காளர்கள் உள்ள நிலையில் அதில் 8 பேர் மட்டுமே வேங்கை வயல் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்கு பதிவு செய்தனர்.

வேங்கைவயல் இறையூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் உள்ள 561 வாக்காளர்களில், 8 பேர் மட்டுமே வாக்கை பதிவு செய்தனர். இதனால் அங்கு வாக்குப்பதிவுக்காக பணியில் உள்ள அலுவலர்கள் வாக்கு சாவடி முகவர்கள், வாக்காளர்களே இல்லாமல் காற்று வாங்கியது. இதையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் திருச்சி டிஆர்ஓ ராஜலெட்சுமி, கொளத்தூர் தாசில்தார் கவியரசு ஆகியோர் நேரில் சென்று வேங்கைவயல் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அந்த மக்கள் மாலை 5.40 மணியளவில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். இதில் 62 பேர் மட்டுமே வாக்களித்தனர். இறையூரை சேர்ந்தவர்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் 62 பேர் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Tags : Vengkaiweil ,Pudukkottai ,Venkaiweal ,Saviyur ,Bargaining People's Election ,Bengaivale ,Dinakaran ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...