×

மக்களவை தேர்தல்; தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவு.! அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10% பதிவு

சென்னை: தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசை நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூரில் 12.31 சதவீதம் , வட சென்னையில் 9.73% , தென் சென்னையில் 10.08 சதவீதம் , மத்திய சென்னையில் 8.59 சதவீதம் , ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதியில் 11.18 சதவீதம், காஞ்சிபுரத்தில் 12.25 சதவீதம் , வேலூரில் 12.76 சதவீதம், கிருஷ்ணகிரியில் 12.57 சதவீதம், தர்மபுரியில் 15 .04 சதவீதம் , திருவண்ணாமலையில் 12.80 சதவீதம் வாக்கு பதிவு ஆகியுள்ளது. அதேபோல் ஆரணியில் 12.69 சதவீதமும், விழுப்புரத்தில் 13.97 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 15 .10 சதவீதமும், சேலத்தில் 14.79 சதவீதமும், நாமக்கல்லில் 14.36 சதவீதமும், ஈரோட்டில் 13.37 சதவீதமும், திருப்பூரில் 13.13 சதவீதமும் , நீலகிரியில் 12.18 சதவீதமும், கோவையில் 12.16 சதவீதமும், பொள்ளாச்சியில் 13.36 சதவீதமும், திண்டுக்கல்லில் 13.16 சதவீதமும், கரூரில் 14.41 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

The post மக்களவை தேர்தல்; தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவு.! அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10% பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Tamil Nadu ,Chennai ,Puducherry ,Dinakaran ,
× RELATED 2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13...