×

ஆந்திராவில் 16 மாவட்டங்களில் சுட்டெரித்த 114.4 டிகிரி வெயில்

திருமலை: ஆந்திராவில் 16 மாவட்டங்களில் 114.4 டிகிரி வெயில் சுட்டெரித்தது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வர வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குனர் ரோனங்கி குர்மநாத் தெரிவித்தார். ஆந்திர மாநில விபத்து மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குனர் ரோனங்கி குர்மநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலத்தில் நேற்று 16 மாவட்டங்களில் அதிகபட்சமாக 114.4 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

இதில் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் எர்ரம்பேட்டையில் 45.8 செல்சியஸ், பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் கொமரடாவில் 45.8 செல்சியஸ்சும், நந்தியாலா மாவட்டம் நந்தவரத்தில் 45.6 செல்சியஸ்சும், விஜயநகரம் மாவட்டம் ஜாமியில் 45.5 செல்சியஸ், ஸ்ரீகாகுளம் மாவட்டம் கோவிலத்தில் 45.4 செல்சியஸ், ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் கோங்குலவீடு பகுதியில் 45.4 செல்சியஸ், திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா, பிரகாசம் மாவட்டம் தாரிமடுகுவில் 45.3 செல்சியஸ் வெயில் பதிவானது.

பல்நாடு மாவட்டம் முட்டுக்கூறு 44.9 டிகிரி செல்சியஸ், அன்னமய்யா மாவட்டம் கம்பலகுண்டா, நெல்லூர் மாவட்டம் காசுமூரில் 44.6 டிகிரி செல்சியஸ், கர்னூல் மாவட்டம் வாகரூர் 44.2 டிகிரி செல்சியஸ், அனகப்பள்ளி மாவட்டம் ரவிகாவடம் 44.1 டிகிரி செல்சியஸ், என்டிஆர் மாவட்டம் சிலக்கல்லு, சித்தூர் மாவட்டம் ராயல்பேட்டை 44 டிகிரி செல்சியஸ் உட்பட 16 மாவட்டங்களில் 44 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியது.

84 மண்டலங்களில் கடுமையான வெப்பக்காற்றும், 120 மண்டலங்களில் வெப்பக்காற்று வீசியது. ஆந்திராவில் இன்று (வெள்ளிக்கிழமை) 245 மண்டலங்களில் கடுமையான வெப்பக்காற்று வீசும். எனவே மக்கள் முடிந்தவரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post ஆந்திராவில் 16 மாவட்டங்களில் சுட்டெரித்த 114.4 டிகிரி வெயில் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Thirumalai ,Ronangi Gurmanath ,AP ,Andhra ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...