×

ஈரான் சிறைபிடித்த இஸ்ரேல் கப்பலின் கேரள பெண் மாலுமி நாடு திரும்பினார்

புதுடெல்லி: கடந்த 13ம் தேதி அரபிக்கடலின் ஹார்முஸ் ஜலசந்தி அருகே சென்ற இஸ்ரேல் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்தது. இக்கப்பல் ஈரான் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கப்பலில் இருந்த 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் ஈரான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர்.

இந்தியர்களை உடனடியாக மீட்க தூதரகம் மூலமாக இந்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, 17 இந்தியர்களில் ஒரே பெண் மாலுமியான அன் டெஸ்சா ஜோசப் விடுவிக்கப்பட்டார். கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த அவர் நேற்று கொச்சின் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

The post ஈரான் சிறைபிடித்த இஸ்ரேல் கப்பலின் கேரள பெண் மாலுமி நாடு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Iran ,New Delhi ,Iranian Navy ,Strait of Hormuz ,Arabian Sea ,Dinakaran ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...