×

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்: நிர்வாகம் தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து கடந்த பல ஆண்டுகளாக மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் முதல்கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் சேவையில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களின் பணி, கல்வி மற்றும் இலக்குகளை நோக்கி பயணித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று (ஏப்.19) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும் 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும் காலை 11 மணி முதல் மாலை 5 வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...