×

உருளைகிழங்கு மசாலா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2-3 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது)
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்ணெய் சேர்த்து உருக வைக்க வேண்டும்.பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னியமாக வதக்க வேண்டும். பின்பு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கினால், சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா ரெடி!

The post உருளைகிழங்கு மசாலா appeared first on Dinakaran.

Tags :
× RELATED தக்காளி புலாவ்