×

சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!

சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலத்துக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தலின் போது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு அரசு பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலத்துக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,957-ல் இருந்து ரூ.12,716-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மதுரை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,674-ல் இருந்து ரூ.8555-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகபட்சமாக விமான டிக்கெட் ரூ.11,531-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை – சேலம் இடையே வழக்கமாக ரூ.2,433-ஆக உள்ள விமான டிக்கெட் கட்டணம் ரூ.5572-ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கோவை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3342-ல் இருந்து ரூ.8616-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல வெளிநாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது. வுஇதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Thoothukudi ,Madurai ,Trichy ,Goa ,Salem ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை...