×

வாக்குச்சாவடி வாரியாக 3ம் கட்ட பணி ஒதுக்கீடு வாக்களிப்பு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிட்டால் புகார் அளிக்கலாம்

மயிலாடுதுறை, ஏப்.18:வாக்குப்பதிவு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிட்டால் புகார் அளிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெறும் நாளை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளார்கள் அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135பின் கீழ் அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவிலான தொழிலாளர் துறையின் மூலம் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விடுமுறை அளிக்கப்படாதது தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவிலான தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) குமார் (அலைப்பேசி எண் 9442912527), மயிலாடுதுறை, முதல் வட்டம், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஹேமா (அலைப்பேசி எண் 9626392971), இரண்டாம் வட்டம், தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் (அலைப்பேசி 9489257573), முத்திரை ஆய்வாளர் ராஜா, (அலைப்பேசி எண் 7418317907) மற்றும் சீர்காழி தொழிலாளர் உதவி ஆய்வாளர் இளஞ்செழியன் (அலைப்பேசி எண் 7904380453) ஆகியோர் அலைப்பேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். மேற்காணும் விபரத்தினை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

The post வாக்குச்சாவடி வாரியாக 3ம் கட்ட பணி ஒதுக்கீடு வாக்களிப்பு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிட்டால் புகார் அளிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthura ,Mayiladudhara ,Dinakaran ,
× RELATED பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு