×

5,145 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு இதுவரை இல்லாத அளவிற்கு ஜவுளிக்கடைகளில் ₹20 கோடிக்கு ஆடைகள் குவிப்பு

கரூர், ஏப். 18: இதுவரை இல்லாத அளவிற்கு ஜவுளிக்கடைகளில் ரூபாய் 20 கோடி அளவிற்கு ஜவுளிக்கடைகளில் ரெடிமேட் ஆடைகள் வந்து குவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதில் எந்த தொழில் செய்தாலும் பண்டிகை காலத்தில் அதற்கான சிறப்பு சலுகைகள் செய்து அதிகரித்து வருகிறது. அடிப்படையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை அதிக நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.

மாட்டுப் பொங்கல் தைப்பொங்கல் ,காணும் பொங்கல் இப்படி கொண்டாடப்படுவதால் பொங்கல் பண்டிகை அதிக நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே புத்தாடை கட்டிய வாங்கிய பொதுமக்கள் தீபாவளி பண்டிகை போன்று பொங்கல் பண்டிகை தினத்திலும் வசதி படைத்தவர்கள் முதல் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வரை அனைவரும் புத்தாடை அணிவது வழக்கமாக தொண்டு தொட்டும் வரும் நிகழ்வாக உள்ளது.

இது வழக்கமான திருவிழாவாக இருந்த போதிலும் இந்தியா முழுவதும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத் தேர்தல் மக்கள் மத்தியிலும், வாக்காளர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்ற ஒரு அம்சமாகும்.
இன்னும் சொல்லப்போனால் பொங்கல், தீபாவளி என்றால் குறிப்பிட்ட வேலை பார்க்க நபர்களுக்கு மட்டுமே போனஸ், சன்மானமும் வழங்கப்படும் ஆனால் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் பாரபட்சம் இல்லாமல் 18 வயசு நிரம்பிய வாக்குரிமை சீட்டு உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டியது சன்மானம் வீடு தேடி வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதுடன் , வாங்கும் சக்தியும் குறிப்பிட்ட நேரத்தில் அதிகரித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஏராளமான பொதுமக்கள் எப்போது தேர்தல் தேதி வரும் நாம் கூடுதல் திருவிழா கொண்டாடுவது போல மகிழ்ச்சியுடன் மனதார கொண்டாடி மகிழ்கின்றனர். காரணம் வைட்டமின் ஏ. இதனால் நடுத்தர மக்கள் ஏழை மக்களிடமும் வாங்கும் திறன் அதிகரித்ததுடன் அதிகமாக பணம் புழக்கத்தில் உள்ளது . மேலும் கரூர் பகுதியில் டெக்ஸ்டைல் கொசு வலை செங்கல் உற்பத்தி நிலையங்கள், பஸ்பாடி தொழில் சராசரி நிலையில் நடைபெற்று வருகிறது.

மேலும் கரூர் பகுதிகளில் ஒரு சில கடைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது புதிதாக பல பெரிய ஜவுளிக்கடை நிறுவனங்களும் கரூர் ஆரம்பிக்கப்பட்டதுடன், மூலை முடுக்குகளிலும் ரெடிமேட் ஷோரூம், தற்காலிக கடைகள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் எண்ணம் போல் ஜவுளி புத்தாடைகளை தேர்வு செய்கின்றனர் .

குறிப்பாக புத்தாடை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் இல்லாத அளவிற்கு ரூபாய் 20 கோடி அளவிற்கு பல்வேறு ஜவுளி கடைகளில் புதிய நவீன மாடல்களில் சென்னை கோவை திருச்சி ஆகிய பெருநகரங் களுக்கு இணையாக ஜவுளிகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக மற்றும் இளைஞர்கள் விரும்பி அணியும் ஜீன்ஸ் பேண்ட், காட்டன் வேஷ்டிகள், ரெடிமேட் துணி வகைகள் விரும்பி தேர்வு செய்துள்ளனர். பெண்கள் அதிகமாக சுடிதார்களே தேர்வு செய்தனர்.
என்பதை கருத்தில் கொண்டு ரூபாய் 200 முதல் பத்தாயிரம் வரை பல்வேறு டிசைன்களில் சுடிதார் கொண்டு வந்து இப்படிக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

பல ஜவுளி கடைகளில் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது, என்ற சிறப்பு போஸ்டரும் வைத்துள்ளதால் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற பொது ஒரு பொது தேர்தலாகவே இத்தேர்தல் அமைந்துள்ளது.

The post 5,145 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு இதுவரை இல்லாத அளவிற்கு ஜவுளிக்கடைகளில் ₹20 கோடிக்கு ஆடைகள் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Dinakaran ,
× RELATED கரூர் காந்தி கிராமத்தில் பராமரிப்பு...