×

அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு

அவிநாசி, ஏப்.18: அவிநாசிலிங்கேசுவரர்கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மலர் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நேற்று நடைபெற்றது. அவிநாசிலிங்கேசுவரர் கோயில் தேர்த்திருவிழா வரும் 21ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று கைலாச வாகனம், புஷ்ப விமானம் புறப்பாடு நடைபெற்றது. நேற்று இரவு சந்திரசேகரர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில் சந்திரசேகரர் அம்பாள் எழுந்தருளி, தேரோடும் வீதிகளின் வழியாக சுவாமி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

The post அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு appeared first on Dinakaran.

Tags : AVINASILINGESWARAR TEMPLE FESTIVAL ,SWAMI ,Avinasi ,Flower Pallak ,Ceremony ,Avinasilingeswarargo ,Avinasilingeswarar Temple Selection Ceremony ,
× RELATED அவிநாசி பகுதியில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து