×

நாளை தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு காலை மற்றும் மதியம் உணவு: தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நாளை காலை, மதியம் உணவு வழங்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேற்று சந்தித்து அளித்துள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் 19ம் தேதி (நாளை) நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் 3 லட்சத்திற்கும் மேலான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். தேர்தல் பணியில், குறிப்பாக வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு உணவுப்படியாக 18, 19 ஆகிய இரண்டு நாட்களுக்கு ரூ.150 வீதம் ரூ.300 வழங்கப்படும். இதில் தேர்தல் நாளான 19ம் தேதி அன்று வாக்குச்சாவடி பணியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடியை விட்டு காலை, மதிய உணவிற்காக எங்கும் வெளியில் செல்ல இயலாது.

கடந்த கால தேர்தல் அனுபவங்களில் பல்வேறு தருணங்களில் இவர்கள் உணவு உட்கொள்ளாமலே பணியாற்ற வேண்டிய கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். எனவே, வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு 19ம் தேதி காலை, மதியம் உணவு வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்து தர மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தக்க ஆணைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

The post நாளை தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு காலை மற்றும் மதியம் உணவு: தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Chief Secretariat Association ,President ,Venkatesan ,Harishankar ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...