×

தேர்தல் பத்திரம் பதிவை நீக்க உத்தரவிட்டது ஏன்?.. காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி, ஏப். 18:தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோரின் குறிப்பிட்ட 4 பதிவுகளை நீக்குமாறு தேர்தல் ஆணையம் டிவிட்டர் சமூக ஊடகத்திற்கு உத்தரவிட்டது.

இது குறித்து காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தலைவர் சுப்ரியா ஸ்ரினேட் தனது டிவிட்டர் பதிவில், ‘‘தேர்தல் ஆணையம் நீக்க உத்தரவிட்ட பதிவுகளில் தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவும் ஒன்று. தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்னையை எழுப்பிய பதிவை நீக்க உத்தரவிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் தேர்தல் ஆணையம் அவ்வாறு உத்தரவிட்டது?’’ என கேட்டுள்ளார்.

The post தேர்தல் பத்திரம் பதிவை நீக்க உத்தரவிட்டது ஏன்?.. காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,Election Commission ,Twitter ,YSR Congress ,Aam Aadmi Party ,Telugu Desam Party ,President ,Chandrababu ,Bihar ,Deputy ,Chief Minister ,Samrat Choudhary ,Dinakaran ,
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை