×

ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை

புவனேஸ்வர்: ஒடிசா மாநில கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலத்தில் பகல் நேரத்தில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல்களின்படி இன்று முதல் ஏப்.20ம் தேதி வரை மாநிலத்தில் 3 நாட்களுக்கு வெப்ப நிலை 45 டிகிரி செல்சியசை(113 டிகிரி பாரன்ஹீட்)தாண்டும் என தெரிவித்துள்ளது.

மயூர்பஞ்ச் மாவட்டம்,பாரிபாடாவில் நேற்றுமுன்தினம் 43.6 டிகிரி செல்சிஸ்(110.48 டிகிரி பாரன்ஹீட்) வெப்ப நிலை பதிவாகியது. இந்தியாவிலேயே அதிக வெப்ப நிலை இங்கு தான் பதிவாகியுள்ளது. மேலும், கட்டாக்,குர்தா,தென்கனல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் வெப்பநிலை காணப்படும். இதையடுத்து இன்று முதல் 3 நாள்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Extreme ,wave ,Bhubaneswar ,Odisha State Education Department ,Indian Meteorological Department ,Odisha ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...