×

சூதாடிய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.18: உத்தனப்பள்ளி போலீஸ் எஸ்ஐ சிவக்குமார் மற்றும் போலீசார், சிங்கிரிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் சூதாடிக்கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முத்தம்பட்டியை சேர்ந்த பெருமாள் (40), நாகராஜ் (35), லிங்கனம்பட்டி சண்முகம் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ₹300 மற்றும் 3 டூவீலர்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சூதாடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Uthanapally Police ,SI ,Sivakumar ,Singripally ,Perumal ,Nagaraj ,Muthampatti, Shanmugam ,Linganampatti ,
× RELATED கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது