×

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான சுற்றுலா படகு ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி கூண்டு இணைப்புப்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக படகு போக்குவரத்து நடக்கவிலலை.

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த குகன் படகை ரூ. 35 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்கவரத்துக் கழகம் முடிவு செய்தது. அதன்படி அந்த படகு கடல் வழியாக சின்னமுட்டம் படகு கட்டும் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கரையேற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தது. படகின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி படகு புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டது. பின்னர் குகன் படகு கடல் வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த படகு சில நாட்களில் வெள்ளோட்டம் விடப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது.

The post பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான சுற்றுலா படகு ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Bhoompur Shipping Corporation ,Kanyakumari ,Vivekananda Memorial Hall ,Boombukar Shipping Corporation ,
× RELATED குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர்...