×

7 நாட்களாக எங்கே பதுங்கி இருக்கிறது?: வனத்துறை விரித்த வலையில் சிக்காமல் போக்குக்காட்டும் சிறுத்தை..!!

அரியலூர்: கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை தொடர்ந்து போக்குக்காட்டி வரும் நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 7 நாட்களாக சிறுத்தை எங்கே பதுங்கி இருக்கிறது? என்பது தெரியவில்லை. கடந்த 2 ம் தேதி முதல் 10ம் தேதி வரை மயிலாடுதுறையில் சிறுத்தை போக்குக்காட்டியது. கிட்டத்தட்ட 9 நாட்களாக வனத்துறையினர் தீவிரமாக தேடினர். ஆனாலும் அவர்களுடைய முயற்சிக்கு பலனளிக்கவில்லை. தொடர்ந்து, கடந்த 11ம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துறையில் சிறுத்தை தென்பட்டது. 12ம் தேதி காலை செந்துறை அருகே சிறுத்தையின் கால் தடம் கண்டறியப்பட்டது.

அதன்பின் ஏழு நாட்களாக கேமரா மற்றும் மனித கண்களுக்கு அகப்படாமல் சிறுத்தை பதுங்கி இருக்கிறது. சிறுத்தையின் தடயங்கள், எச்சங்கள் கிடைக்காமல் வனத்துறை திணறி வருகிறது. சேலம் பச்சைமலை, கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை, நாமக்கல் கொல்லிமலை, ஏற்காடு தருமபுரி கிருஷ்ணகிரி வழியாக மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்றிருக்கலாமா? என கேள்வி எழுந்துள்ளது. பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கும் இடம்பெயர்ந்திருக்குமா என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. வனத்துறையினர் பல்வேறு வகையில் வலை விரித்தும் தற்போது வரை சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

The post 7 நாட்களாக எங்கே பதுங்கி இருக்கிறது?: வனத்துறை விரித்த வலையில் சிக்காமல் போக்குக்காட்டும் சிறுத்தை..!! appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Mayiladu ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...