×

ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்டத் தேர்தலில், 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் போட்டி!!

புதுடெல்லி: ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்டத் தேர்தலில், 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் களம் காண்கின்றனர். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில், தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 39 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள், அசாம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகளில் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்தத் தேர்தலில், 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

*தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தென் சென்னையில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இவர் திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அதிமுகவின் ஜெயவர்த்தன் ஆகியோருக்க எதிராக களம் காண்கிறார்.

*ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

*அருணாச்சலப் பிரதேசம் மேற்கு மக்களவைத் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, களம் காண்கிறார்.

*ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சரான சர்பனாதா சோனோவால், அசாமின் திப்ருகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

*உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் தொகுதியில், ஒன்றிய அமைச்சர் சஞ்சீவ் பலியன் களத்தில் உள்ளார்.

*ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து களத்தில் உள்ளார்.

*ஒன்றிய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான பூபேந்திர யாதவ், ராஜஸ்தானின் அல்வார் தொகுதியில் களம் காண்கிறார்.

*ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

The post ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்டத் தேர்தலில், 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் போட்டி!! appeared first on Dinakaran.

Tags : Union ,New Delhi ,Lok Sabha ,India ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை