×

பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை நமீதா இருசக்கர வாகனத்தில் சென்று பரப்புரை..!!

பூந்தமல்லி: பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை நமீதா இரு சக்கர வாகனத்தில் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பரப்புரை கடைசி நாளான இன்று திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் பாலகணபதியை ஆதரித்து பாஜக கட்சியின் நிர்வாகியும், நடிகையுமான நடிகை நமீதா இன்று பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மட் அணிந்து தேர்தல் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.

அப்போது பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் காட்டுப்பாக்கம் முதல் பூந்தமல்லி வரை இருசக்கர வாகனத்தின் பேரணியாக சென்றனர். மேலும் பேரணியாக சென்ற போது மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கோஷத்தை எழுப்பியவாறு தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு நமீதாவுடன் கூட்டணி கட்சியினர் மற்றும் பாஜகவினர் பேரணியாக இரு சக்கர வாகனத்தில் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதனை தொடர்ந்து நசரத் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தேர்தல் பரப்புரையில் நமீதா ஈடுபட உள்ளார்.

 

The post பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை நமீதா இருசக்கர வாகனத்தில் சென்று பரப்புரை..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Poontamalli ,Namitha ,Balaganapathy ,Tiruvallur ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்