×

கடும் நிதி நெருக்கடியிலும் தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கோவை: கடும் நிதி நெருக்கடியிலும் தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மக்களவைத் தொகுதி காரணம்பேட்டை பகுதியில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர்; கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 415 கோடி மகளிர் பயணம் செய்துள்ளனர். 3.5 லட்சம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.

திராவிட மாடல் அரசின் திட்டங்களை பிற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன. கட்டணமில்லா பேருந்து திட்டம் கர்நாடகா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடுபட்ட மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். நிதி பகிர்வில் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது. கடும் நிதி நெருக்கடியிலும் தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கொரோனாவின்போது விளக்கை பிடியுங்கள் கைத்தட்டுங்கள் என கூறியவர் மோடி.

கோவிட் வார்டுக்குள் சென்று ஆய்வு செய்த ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். சானிட்டரி நாப்கினுக்கு எதற்கு ஜிஎஸ்டி என்று கேட்ட பெண்ணை பாஜகவினர் தாக்கியுள்ளனர். கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை இவ்வாறு கூறினார்.

The post கடும் நிதி நெருக்கடியிலும் தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Udayanidhi Stalin ,Coimbatore ,Udhayanidhi Stalin ,DMK ,Ganapathi Rajkumar ,Coimbatore Lok Sabha Constituency Prasadupettai ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...